Sunday, September 7, 2008

ஆடுங்க ஆடுங்க ஆடிக்கிட்டே இருங்க....

டிவிக்களில் ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சிகள் அமர்க்களப்படுகிறது. அதைப் பார்க்கும் நமக்கு நாடி நரம்பெல்லாம் முறுக்கெடுக்கிறது. விதவிதமான கெட்டப்புகளில் ஆடுகிறார்கள். இடையிடையே நெஞ்சைத் தொடும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. கலாமோகினியின் தயாரிப்பில் நடக்கும் ஆட்டம் பாட்டம், மானாட மயிலாட நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது கலாமோகினியின் சேவை தமிழ் கலாச்சாரத்திற்கும், கற்புக் கலாச்சாரத்திற்கும் எந்த அளவுக்கு உதவிகள் செய்கின்றன என்று எண்ணி புளகாங்கிதமடைவேன். கிஜினியின் பொண்ணு, ஜூவா, சிரிங்கீதா பங்குபெறும் நிகழ்ச்சியில் அடடா என்னாமா படம் காட்டுறாங்க. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை முதலில் கண்டுகளிக்க வேண்டும். குடும்பமாவது குட்டியாவாது, புண்ணாக்கு என்ற மன நிலையில் இந்த நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தால் கோடி புண்ணியம் வரும்.

Labels: ,

Tuesday, July 22, 2008

சுப்ரமணியபுரம்

சினிமான்னா என்னான்னு தெரியுமா சசிகுமாரு ? ஒரு குத்துப்பாட்டு, கொஞ்சம் அஜால் குஜால் டயலாக்குகள், கற்பழிப்பு சீனு, குதிக்கிறா மாதிரி ஒரு ஓட்டம், முதலிரவுக் காட்சி, முத்தக்காட்சி, அடிதடின்னு இல்லாம இது என்னாயா படம் ? ஒழுங்கா படம் எடுக்க மாட்டீங்களா ? தொட தெரியலை, தொப்பூள் தெரியலை. ஒரு குலுக்கு இல்லே. கொடுக்கிற காசுக்கு ஏதாவது வேணும்ல. இதெல்லாம் பரவாயில்லன்னு பார்த்தா, எவனப்பாத்தாலும் படம் நல்லாருக்கு அப்பிடின்னு வேற லொள்ளாப் பேசுறாங்க. கேக்க கடுப்புக் கடுப்பா வருது. கொடுமைடா சாமி. தியேட்டரில ஆடாம அசையாம உக்கார வச்சா முதுகெலும்பு வலிக்காது. என்னா படமோ என்ன கருமமோ ?

Labels: